ஷங்கர்-ரஜினி கூட்டணியில் இணைய கமல் மறுக்க காரணம் இதுதான்..!


ஷங்கர்-ரஜினி கூட்டணியில் இணைய கமல் மறுக்க காரணம் இதுதான்..!

தங்கள் ஆரம்ப கால படங்களில் கமலும் ரஜினியும் இணைந்து கிட்டதட்ட 12 படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் அதன்பின்னர் 25 வருடங்களாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் ஷங்கர் இயக்கி, லைகா நிறுவனம் ரூ. 350 கோடியில் தயாரிக்கும் 2.0 படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதற்க்கான பேச்சுவார்த்தை எழுந்தது.

ஆனால் அதில் கமல் நடிக்கவில்லை என்பதால் தற்போது அக்ஷய்குமார் நடித்து வருகிறார்.

தற்போது நடிக்காமல் போனதற்கான காரணத்தை கமலே தெரிவித்துள்ளார்.

வில்லன் வேடம் என்றாலும் ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தால், அந்த படத்தை எங்களில் ஒருவர்தான் தயாரிக்க வேண்டும் என நாங்கள் அப்போதே முடிவு செய்திருந்தோம். எனவேதான் அதில் நடிக்கவில்லை’ என கமல் தெரிவித்துள்ளார்.