கமலின் ‘தூங்காவனம்’ பாடல்கள் வெளியீட்டு தேதி!


கமலின் ‘தூங்காவனம்’ பாடல்கள் வெளியீட்டு தேதி!

கமல்ஹாசனின் உதவியாளர் அறிமுக இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம்தூங்காவனம்’. படத்தை தீபாவளிக்கு வெளியிடருப்பதால் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மது ஷாலினி, கிஷோர், ஆஷா சரத், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கமல், த்ரிஷா மற்றும் கிஷோர் ஆகிய மூவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் மற்றும் சம்பத் ஆகியோர் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த வில்லன்களாக நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் சுகா வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் சீக்கட்டி ராஜ்யம்என்ற பெயரில் வெளியாகிறது.

விநாயகர் சதுர்த்தி முன் தினம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் படத்தின் இரண்டாவது ட்ரைலரை வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.