கமலின் ‘தூங்காவனம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்!


கமலின் ‘தூங்காவனம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் ‘தூங்காவனம்’. இப்படத்தில் இவருடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மது ஷாலினி, கிஷோர், ஆஷா சரத், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் சுகா வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி தினமானது (நவ.10) செவ்வாய்கிழமை வருவதால் தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை நவம்பர் 6ஆம் தேதி வெளியிட தீர்மானித்திருந்தனர்.

ஆனால் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருவதால் கமல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திட அன்றைய தினமே ‘தூங்காவனம்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இப்படம் தெலுங்கில் ‘சீக்கட்டி ராஜ்யம்’ என்ற பெயரில் வெளியாகிறது.

இப்படத்திற்கு திரைக்கதை எழுதி கமல்ஹாசனே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது