கார்த்தியின் தோழா.. பாராட்டு மழையில் படக்குழு…!


கார்த்தியின் தோழா.. பாராட்டு மழையில் படக்குழு…!

கார்த்தி, நாகார்ஜீனா, தமன்னா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து அண்மையில் வெளியானது தோழா. இப்படம் விமர்சர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ சினிமாஸ் தனது பாராட்டு மழையை தோழா படத்திற்கு பொழிந்துள்ளது.

சுமார் 120 ஆண்டிற்கு முன் பிறந்ததுதான் ‘கௌமான்ட்’ நிறுவனம். இந்நிறுவனத்தால் 2011 ஆம் ஆண்டு பிரான்ஸில் வெளியான திரைப்படம் தான் ‘தி இன்டச்சபல்ஸ்’.

இப்படத்தின் ரீமேக்கான தோழா படம் பெரும் வெற்றியடைந்ததால், அந்நிறுவனம் இப்படத்தின் இயக்குனர் வம்சிக்கும் பிவிசி சினிமாஸ் நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் தனது பாராட்டை தெரிவித்துள்ளது.

தோழா படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக்காகவுள்ளது. பிரபல இயக்குனர் கரன் ஜோஹர் ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.