தமிழில் 9 கோடி… தெலுங்கில் 7 கோடி… கலக்கும் கார்த்தி.!


தமிழில் 9 கோடி… தெலுங்கில் 7 கோடி… கலக்கும் கார்த்தி.!

ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் மற்றும் முத்தையா இயக்கத்தில் கொம்பன் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தார் கார்த்தி.

இதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் நடித்த தோழா படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்து ஹாட்ரிக் அடித்தார்.

தமிழைப் போலவே இப்படம் தெலுங்கிலும் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.

இதற்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் தோழா படக்குழுவினர் கலந்து கொண்டர்.

இந்நிலையில் இதன் சாட்டிலைட்ஸ் உரிமை தெலுங்கில் ரூ 7 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

மேலும் தமிழின் சாட்டிலைட்ஸ் ரைட்ஸ் ரூ 9 கோடிக்கு விற்க பேசப்பட்டு வருகிறதாம்.