ஒரே நாளில் ஒரே குடும்பத்தின் மூன்று படங்கள்!


ஒரே நாளில் ஒரே குடும்பத்தின் மூன்று படங்கள்!

கடந்த 1959ம் ஆண்டு சிவாஜிகணேசன் நடித்து வெளியான படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. கிட்டதட்ட 55 ஆண்டுகளை கடந்த இப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகவுள்ளது. இன்றைய தலைமுறைக்காக ராஜ் டி.வியும், சாய் கணேஷ் பிலிம்சும் இணைந்து டிஜிட்டலில் விருந்தளிக்கிறார்கள். இதில் சிவாஜிகணேசன். ஜெமினி கணேசன், பத்மினி, எஸ்.வரலட்சுமி, ராகினி நடித்திருந்தார்கள். ஜி.ராமநாதனின் இசையமைக்க சுப்பாராவ், கர்ணன் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்தனர்.

இப்படம் வருகிற ஜூலை 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதே நாளில் சிவாஜியின் மகன் பிரபு படமும் சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபுவின் படமும் வெளியாகவுள்ளது.

சுராஜ் இயக்கி பிரபு நடித்துள்ள ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’ படம் வெளியாகவுள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இது என்ன மாயம்’ படமும் வெளியாகவிருக்கிறது. இதில் கீர்த்திசுரேஷ், நவ்தீப், அம்பிகா, நாசர், சார்லி, ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு நீரவ் ஷா  ஒளிப்பதிவு செய்ய, G.V.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரிக்க இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.

ஆக மொத்தத்தில் ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் மூன்று படங்கள் வெளியாகவுள்ளதால் இவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.