‘ரஜினி-கமல் மாதிரி தொடங்குங்கள்; விஜய் ஆகனும்னு நினைக்காதீர்கள்..’ – திருப்பூர் சுப்ரமணியம்..!


‘ரஜினி-கமல் மாதிரி தொடங்குங்கள்; விஜய் ஆகனும்னு நினைக்காதீர்கள்..’ – திருப்பூர் சுப்ரமணியம்..!

ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்ற, மருது பட பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசியபோது…

திருட்டு விசிடிக்கு தியேட்டர் அதிபர்களே துணை போகிறார்கள் என பேசியிருந்தார்.

விஷாலின் இந்த பேச்சை கண்டித்து, நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு வாட்ஸ் அப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில்…

நல்ல படம் என்றால் ஓட்டுவதற்கு நாங்க ரெடிதான். ஆனால் பெரிய நடிகர்கள்தான் சின்ன படங்களை ஓடவிடாமல் செய்கிறீர்கள்.

ஒரு பெரிய படத்திலேயே மக்களிடம் இருக்கும் மொத்த காசையும் பிடுங்கிவிடுகிறீர்கள். அதிக டிக்கெட் விலை கொடுத்து, அவர்கள் அந்த படங்களை பார்ப்பதால், மற்ற சின்ன படங்களுக்கு அவர்கள் வருவதில்லை.

அரசாங்கத்திடம் முறையிட்டு டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யுங்கள். சதவீத அடிப்படையில் படங்களை கொடுங்கள். கார்ப்பரெட் கம்பெனிகளுக்கு 50% கொடுப்பது போல், சிறு திரையரங்குகளுக்கும் கொடுங்கள்.

சின்ன சின்ன திரையரங்குகளில் கண்விழித்துப் படம் ஓடியதால்தான் இன்று நடிகர்கள் சொகுசாக வாழ்கிறீர்கள்.

யாரோ ஒருசில திரையரங்க உரிமையாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக அனைவரையும் குற்றம் சொல்வது நியாயமல்ல.

நடிகர்களுக்கு 10 கோடி, 40 கோடி என்று சம்பளம் வேண்டாம். லாபம் பொறுத்து வாங்கி கொள்கிறோம் என்று நடிகர் சங்கம் அறிவிக்குமா?

சம்பளம் முழுவதும் கொடு, கேரவன் கொடு என்று கேட்கிறீர்கள். ஏன் வெயிலில் நின்றால் கறுப்பாகி விடுவீர்களா?

நாங்களும் வெயிலில்தான் நிற்கிறோம். ஒரு படத்துக்கு சக்சஸ் மீட் என்று தயாரிப்பாளர் பணத்தில் ரூ. 20 லட்சம் வரை செலவு செய்கிறீர்கள்?

சமீபத்தில் ‘பிச்சைக்காரன்’ படம் மட்டுமே 3 மடங்கு லாபம் கொடுத்தது.

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் எடுத்தவுடனே தன் மகனை ஹீரோவாக்கி விட்டார். ஏன்? ரஜினி சார், கமல் சார் போல சிறு சிறு வேடங்களில் நடித்தபின் அவரது மகனை நாயகனாக்கி இருக்கலாமே.

தொடக்கத்திலேயே விஜய் மாதிரி நேரடி நாயகனாக ஆக்க ஆசைப்பட்டார். விஜய்யை நாயகனாக்க அவரின் தந்தை எஸ்ஏசி எவ்வளவு கஷ்டப்பட்டார்..? கிட்டதட்ட 10 படங்கள் வரை சொந்த காசு போட்டு செலவு செய்தார்.

எந்தவொரு வாரிசு நடிகர் என்றாலும், எடுத்தவுடனே ஹீரோ வேஷம் போடுவது ஏன்..?

இவ்வாறு அதில் பேசியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.