‘விஜய்க்காக நடைமுறையை மாற்ற முடியாது..’ விளாசிய விநியோகஸ்தர்..!


‘விஜய்க்காக நடைமுறையை மாற்ற முடியாது..’ விளாசிய விநியோகஸ்தர்..!

நாளை மறுநாள் மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கிடையில் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள தெறி ரிலீஸ் ஆகிறது.

இதனிடையில் தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் வசூலித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோர்ட் உத்தரவின்படி போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

இதனால், பெரிய தொகைக்கு தெறியை வாங்கிய தியேட்டர் உரிமையாளர்கள் எப்படி லாபம் பார்ப்பது? என குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால், கோர்ட் உத்தரவை மீறி, டிக்கெட் விலையை அதிக கட்டணத்திற்கு விற்க சொன்னதாக தாணு, கூறியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது…

தாணு அவர்கள் மிகுந்த பொருட்செலவில் தெறி படத்தை தயாரித்து விட்டார். எனவே படத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஓடித்தருமாறு கேட்டுக் கொண்டார்.

நாங்கள் விஜய்யின் தெறி படத்திற்காக எங்கள் சிஸ்டத்தை மாற்றிக் கொள்ள முடியாது. கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு நிர்ணயித்த விலையை மட்டுமே வாங்குவோம்.

மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் தியேட்டர்களுக்கு வருவதே பெரிய விஷயமாக உள்ளது. இதில் எங்களால் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது என்று அவரிடம் தெரிவித்து விட்டோம். இப்போது எந்தவித பிரச்சினையும் இல்லை” என்றார்.