ஜெயம் ரவி-சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர் வெளியானது..!


ஜெயம் ரவி-சமுத்திரக்கனி இணையும் படத்தின் பெயர் வெளியானது..!

இனி ஒன்றரை வருடத்திற்கு எந்த புதுப்படங்களிலும் நடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார் ஜெயம் ரவி.

தற்போது லக்ஷ்மன் இயக்கத்தில் போகன் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குனர் விஜய், கௌதம் மேனன், சுசீந்திரன், சமுத்திரக்கனி, மோகன் ராஜா ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமுத்திரக்கனி இயக்கும் படத்திற்கு தொண்டன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களின் கூட்டணியில் வெளியான நிமிர்ந்து நில் படத்தை போன்று இதுவும் ஒரு சமூக அவலங்களை உணர்த்தும் படமாக உருவாகவுள்ளதாம்.

நம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

கடந்த 1995ஆம் ஆண்டில் தொண்டன் என்ற பெயரில் முரளி நடித்த படம் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.