முன்னணி ஹீரோ நடிக்கும் ‘இன்று நேற்று நாளை’ பார்ட்-2


முன்னணி ஹீரோ நடிக்கும் ‘இன்று நேற்று நாளை’ பார்ட்-2

அறிமுக இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் நடித்துள்ள இப்படத்தை ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. ‘டைம் மெஷின்’ கான்செப்ட்டை இப்படத்தில் பயன்படுத்தியிருந்தனர்.

தமிழ் சினிமாவுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்படத்தை மிகவும் ரசித்து பார்த்து வருகின்றனர். படம் வெளியான நாள் முதலே வசூல் வேட்டையை தொடங்கியது. இதுவரை 3 நாட்களில் 3 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் கதை உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். இதன் இரண்டாம் பாகத்தில் பிரபல முன்னனி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.