நடிகைகள் சம்பள பட்டியல், முதல் இடத்தில் யார்?


நடிகைகள் சம்பள பட்டியல், முதல் இடத்தில் யார்?

தமிழின் முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைந்த பட்ச ரூ. 5 கோடியில் தொடங்குகிறது. ஒவ்வொரு படத்தின் வெற்றியை பொறுத்து இவர்களின் சம்பளம் மாறுபட்டு வருகிறது. டாப் ஹீரோக்கள் 40 கோடி வரை சம்பாதிக்கின்றனர். இவர்கள் தொடர்ந்து 20, 30 வருடங்களை கடந்தாலும் நாயகனாவே நடிக்கின்றனர்.

ஆனால் நடிகைகளின் நிலையோ சற்று மோசம்தான். 5-10 வருடங்களில் இவர்களது நாயகி வேடம் முடிவுக்கு வருகிறது. அதிலும் ஒரு சிலர் 5 வருடங்களை கூட முழுமையாக கடப்பதில்லை. பின்னர் அக்கா, அண்ணி, அத்தை, அம்மா வேடத்திற்கு தாவிவிடுகின்றனர். ஒரு சிலர் டிவி சீரியல் மற்றும் ரியால்ட்டி ஷோக்களில் தலை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழ் படங்கள் ஆந்திரா மற்றும் கேரளாவிலும் வசூல் வேட்டையாடி வருகின்றன. அதுபோல தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டும் வருகின்றன. இதனால் நடிகைகள் தங்கள் சம்பளத்தை ஏற்றியுள்ளனர்.

இதில் நடிகைகள் சம்பள பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.2½ கோடி வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. இவர் காதல் தோல்வி மற்றும் பிற சர்ச்சைகளில் சிக்கினாலும் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். இவரது மார்க்கெட் என்றும் சரியாது போல என்று சக நடிகைகள் கடுப்பில் இருப்பது வேறு கதை.

தற்போது ‘மாயா’, ‘நானும் ரவுடிதான்’, ‘தனி ஒருவன்’, ‘காஸ்மோரா’, ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்’ உள்ளிட்ட தமிழ் படங்கள் நயன்தாரா கைவசம் உள்ளது.

இவருக்கு அடுத்த இடத்தில் அனுஷ்கா உள்ளார். இவர் ரூ.2 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ வசூல் சாதனை புரிந்து வருகிறது. மேலும் வரவிருக்கும் ‘பாகுபலி-2’வில் இவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவரது நடிப்பில் ‘ருத்ரமாதேவி மற்றும் இஞ்சி இடுப்பழகி’ படங்கள் வெளிவரவிருக்கிறது.

இவர்களைத் தொடர்ந்து மற்ற நடிகைகள்…

  • தமன்னா : ரூ.1¾ கோடி
  • காஜல் அகர்வால் : ரூ.1 கோடி
  • ஸ்ரேயா : ரூ.1 கோடி
  • த்ரிஷா : ரூ.90 லட்சம்
  • ஸ்ருதிஹாசன் : 80 லட்சம்
  • ஹன்சிகா : ரூ. 70 லட்சம்
  • சமந்தா : ரூ.65 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.