அஜித்-சிம்பு இடையே டி.ராஜேந்தரால் பிரச்சினை?


அஜித்-சிம்பு இடையே டி.ராஜேந்தரால் பிரச்சினை?

கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 14) மிகுந்த பரபரப்புக்கிடையே சிம்பு, சந்தானம், ஹன்சிகா, விடிவி கணேஷ் நடித்த ‘வாலு’ வெளியானது. இப்படத்தின் அறிமுக காட்சியிலே ரஜினி, கமல், விஜய், அஜித் முகங்கள்தான் (மாஸ்க்) தோன்றும்.

இதில் சிம்பு, அஜித் மாஸ்க் அணிந்திருப்பார். அதுமட்டுமில்லாமல் படத்தின் நிறைய காட்சிகளின் தல புராணம் பாடியிருப்பார் சிம்பு. இதனால் படத்திற்கு அஜித் ரசிகர்களின் வரவேற்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஆனால் தற்போது வரும் தகவல்கள் அஜித் ரசிகர்களை சற்று வருத்தமடையச் செய்யலாம். இதற்கு முக்கிய காரணம் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர்தானாம். ‘வாலு’ படத்திற்கு விஜய் உதவியதை பல மேடைகளில் கூறிய டி.ஆர். அஜித் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.

சிம்பு அஜித்தை பற்றி கூறினாலும் டி.ஆர். ஒன்றும் குறிப்பிட்டு பேசவில்லையாம். என் மகன் அஜித்தின் ரசிகர் என்று தெரிந்தும் விஜய்யே உதவினார் என அடிக்கடி கூறினார். மேலும் விஜய் ஒரு உண்மையான தமிழன் என்று கூறியுள்ளார். இது அஜித்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.