கமலின் ‘கல்யாணராமன்’ ரீமேக்; பல்லியாக ‘த்ரிஷா’?


கமலின் ‘கல்யாணராமன்’ ரீமேக்; பல்லியாக ‘த்ரிஷா’?

இன்றைய தமிழ் படங்களுக்கு பெயர் வைப்பதிலே தட்டுப்பாடு இருக்கும்போது  கதைக்கு தட்டுப்பாடு இல்லாமலா போகும். பழைய படங்களின் தலைப்புகளை புதுப்படங்களுக்கு பயன்படுத்தி கொள்வது போல ரீமேக் என்ற பெயரில் பழைய படங்களை இன்றைய பாணியில் புதுப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், 1979ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘கல்யாணராமன்’ திரைப்படத்தை ரீமேக் செய்யவிருக்கின்றனர். இந்தப் படத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்க ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். ஜி.என். ரங்கராஜன் இயக்கி இளையராஜா இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

த்ரிஷாவின் மேனேஜராக பணிபுரிந்த கிரிதர் என்பவரின் “கிரிதர் புரொடக்ஷன்ஸ் ஹவுஸ்” என்ற நிறுவனம் தயாரிக்கும் படத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கிறார் என்பதை முன்பே நாங்கள் தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது மேனேஜர் தயாரிக்கும் இந்த ரீமேக் படத்தில்தான் த்ரிஷா நடிக்கப்போகிறாராம்.

கல்யாணராமன் படத்தில் கமல்ஹாசன் மாற்றுத்திறனாளியாகவும், நாகரீக இளைஞனாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். ரீமேக் படத்தில் ஹீரோ கேரக்டரில் ஹீரோயின் வருகிறார். மாற்றுத் திறனாளியாகவும் மாடர்ன் பெண்ணாகவும் இரு வேடங்களில் வருகிறார். அக்கா, தங்கையாக டபுள் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். தான் இதுவரை நடிக்காத கேரக்டரில் நடிக்கப்போகிறேன் என்று த்ரிஷா கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, அஞ்சலியுடன் ‘அப்பாடக்கரு’ மற்றும் ஓவியா, பூனம் பஜ்வா ஆகியோருடன் ‘போகி’ ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.