தல’ அஜித், ‘சீயான்’ விக்ரம் வரிசையில் வரலட்சுமி..!


தல’ அஜித், ‘சீயான்’ விக்ரம் வரிசையில் வரலட்சுமி..!

‘அட்டக்கத்தி’ தினேஷ், ‘ஆடுகளம்’ நரேன், ‘ஆடுகளம்’ முருகதாஸ் என பல நடிகர்களுக்கு அவர்கள் நடித்த படமே முகவரி ஆனது. இவர்களின் வரிசையில் ‘நிழல்கள்’ ரவி, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி ஆகியோருக்கும் சிறப்பு இடம் உண்டு.

இவர்களுடன் படப்பெயர் ஒட்டிக் கொண்டது போல ஒரு சில நடிகர்களுக்கு அவர்களின் கேரக்டர்கள் பெயர்களே மாபெரும் அங்கீகாரத்தை தந்துள்ளது. இதில் அஜித் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.

‘தீனா’ படத்தின் மூலம் ‘தல’ அஜித் என்று அழைக்கப்படுகிறார். ‘சேது’ படத்தின் மூலம் ‘சீயான்’ விக்ரம் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர்களின் வரிசையில் வரலட்சுமியும் இணைந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

அண்மையில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் இதில் வரலட்சுமி ஏற்ற ‘சூறாவளி’ கேரக்டர் பெரும் புகழைப் பெற்று தந்துள்ளது.

இந்த கேரக்டருக்கு இவருக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினிகாந்த், வரலட்சுமியை தொடர்பு கொண்டு பாராட்டினார். அதுபோல் இன்று த்ரிஷாவும் வருவை பாராட்டித் தள்ளியுள்ளார்.

தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் த்ரிஷா கூறியதாவது… “டார்லிங் வரு, உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கவில்லை என்றால் தாரை தப்பட்டையில் உன் நடிப்புக்கு கொஞ்சம் பொறாமைப்பட்டிருப்பேன். ஆனால் உன் நடிப்பை நினைத்து நான் இன்று மிக பெருமையடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.