த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல்; 15 வருஷத்துல 50 படம்!


த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல்; 15 வருஷத்துல 50 படம்!

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் ‘மிஸ் மெட்ராஸ்’ த்ரிஷா 1999ஆம் வருடம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 15 வருடங்களை கடந்த விட்டபோதிலும் இன்றும் தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஒரு நடிகருக்கு இது சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு நடிகையால் 5 வருடங்களை கடப்பதே பெரிய விஷயம். ஒருவேளை கடந்தாலும் 10 வருடங்களில் கதாநாயகி வேடம் தவிர்த்து அக்கா, அண்ணி என்ற கேரக்டர் ரோல்களை செய்ய வேண்டியதிருக்கும். அழகும் திறமையும் இருந்தால் மட்டுமே திரையுலகில் நீடிக்க முடியும். இந்த அரிய நிகழ்வை நடத்திய நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர்.

இந்த 15 வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 50 படங்களை கடந்து விட்டார் இவர். தற்போது ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, ‘அப்பாடக்கரு’ ஆகிய படங்களிலும் ஓவியா-பூனம் பஜ்வா ஆகியோருடன் போகி படத்திலும், கமல்ஹாசனுடன்  ‘ஓர் இரவு’ படத்திலும் செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

எவர்கிரீன் ஹீரோயின் த்ரிஷாவுக்கு சினி காஃபி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்!