கருவிழியால் கொல்கிறாள், ஆனாலும் சுகமே… த்ரிஷாவை வாழ்த்தும் ரசிகர்கள்..!


கருவிழியால் கொல்கிறாள், ஆனாலும் சுகமே… த்ரிஷாவை வாழ்த்தும் ரசிகர்கள்..!

சினிமாவில் நுழைந்து 13 வருடங்களை கடந்தும், இன்றும் தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாவே திகழ்கிறார் த்ரிஷா.

இன்று அவர் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரை வாழ்த்துவதற்காக #HappyBirthdayTrisha என்ற ஹெஷ்டேக்கையும் உருவாக்கியுள்ளனர்.

சில ரசிகர்கள் த்ரிஷாவை வர்ணித்து வாழ்த்தியுள்ளனர். அவற்றில் சில…

  • Happy Birthday Thalaivi Trisha @trishtrashers #HappyBirthdayTrisha pic.twitter.com/GITwZMstgW
  • அழகான எல்லாப் பெண்களாலும் ஹீரோயின் ஆகமுடியும். ஆனால் எல்லா ஹீரோயினாலும் த்ரிஷாவாக முடியாது.
  • @trishtrashers தனியாய் வந்தாய், தளிராய் மலர்ந்தாய், தலைக்கனம் ஏதுமின்றி, தனக்கென ஓரிடம் கண்டாய் #HappyBirthdayTrisha
  • கரு விழிகளில் கயல்விழி கொல்கிறாள். வலித்தாலும் அதுவும் சுகமே…

இப்படி பல கவிதை வரிகளில் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் த்ரிஷா.

சினி காஃபி சார்பாக அவரை வாழ்த்தி மகிழ்கிறோம்.