மீண்டும் அரசியல் களத்தில் நடிகை த்ரிஷா…!


மீண்டும் அரசியல் களத்தில் நடிகை த்ரிஷா…!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதுபோல் தமிழ் சினிமாவில் சில படங்களிலும் அரசியல் காட்சிகள் சூடு பிடித்து வருகிறது.

கடந்தாண்டு வெளியான அப்பாடக்கர் சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவி அணியின் சார்பாக த்ரிஷாவும், சூரி அணி சார்பாக அஞ்சலியும் தேர்தல் களத்தில் மோதி கொண்டனர்.

தற்போது மீண்டும் அரசியல் களம் காணவிருக்கிறார் த்ரிஷா.

தனுஷ் உடன் அவர் நடித்து வரும் ‘கொடி’ படத்தில் அரசியல்வாதியாக வருகிறாராம்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஏற்கெனவே அரசியல் மேடைகளில் பேசுவது போல் தனுஷ் இருந்த புகைப்படங்கள் வெளியானது.

அதுபோல் த்ரிஷாவும் அரசியல்வாதி வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ருத்ராவின் அறப்போராட்டம் என்றும் குறிப்பிடப்பட்டள்ளது.

தொடர்ந்து த்ரிஷா அரசியல் வேடங்களை ஏற்று வருவதை பார்த்தால் நிஜமான அரசியலுக்கு ஒத்திகை பார்க்கிறாரோ? என்றே தோன்றுகிறது.