ரஜினி, சிவகார்த்திகேயனோடு நடிக்க ஆசைப்படும் த்ரிஷா..!


ரஜினி, சிவகார்த்திகேயனோடு நடிக்க ஆசைப்படும் த்ரிஷா..!

கடந்த 12 வருடங்களாக தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் த்ரிஷா. இவர் முதன்முறையாக பேய் வேடம் ஏற்று நடித்துள்ள ‘அரண்மனை 2’ நேற்று வெளியானது.

இந்நிலையில் ட்விட்டர் தளத்த்தில் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் த்ரிஷா. அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என ஒருவர் கேட்டார்.

ரஜினியுடன் ஜோடியாக நடிக்க ஆசை என்றார். அதன்பின்னர் வேறு ஒரு ரசிகர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டீர்களாமே? என்று கேட்டார். ‘அப்படி ஒன்றும் இல்லை. அவருடனும் நடிக்க எனக்கும் ஆசைதான்’ என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவின் இந்த பதிலை அறிந்த சிவகார்த்திகேயன் சும்மா இருப்பாரா? “மகிழ்ச்சி. த்ரிஷாவுக்கு நன்றி என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.