த்ரிஷாவின் கன்னி முயற்சி எப்படி…? பாடல் ஒரு பார்வை…


த்ரிஷாவின் கன்னி முயற்சி எப்படி…? பாடல் ஒரு பார்வை…

பன்னிரெண்டு வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் நாயகியாக கலக்கி வரும் த்ரிஷா, தற்போது நாயகி என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் கோவி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷாவுடன் சுஷ்மா ராஜ், கணேஷ் வெங்கட்ராமன், சத்யம் ராஜேஷ், ஜெயப்பிரகாஷ், கோவை சரளா, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரகு குஞ்சே இசையமைத்துள்ள இப்படத்தை கிரிதர் தயாரித்துள்ளார்.

இத்தனை வருடங்களை சினிமா உலகில் த்ரிஷா கடந்து விட்டாலும், தற்போதுதான் படங்களில் சொந்த குரலில் பேசி வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக தன் கன்னி முயற்சியாக நாயகி படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். சற்றுமுன் இப்பாடல் இணையத்தில் வெளியானது.

இப்பாடல் இப்படி தொடங்குகிறது….

இரவுப் பொழுதிலே… இடி விழுந்தால்
மனசு பதறுமே ஐய்யோ பயம்….
காட்டு வழியிலே… மிட்டு நைட்டுல…
பஞ்சர் ஆனா டென்ஷன் பயம்…

சரக்கு அடிச்சிட்டு பாஸ திட்டிட்டா…
காலையில் ஆபிஸ் பயம்…
எக்ஸ் கேர்ள் ப்ரண்டுடன் மனைவியிடம் சிக்கினா
கடவுளே இப்போ பயம்….

ஏய் கையிலதான் அரிப்பெடுத்து,
ஸ்யூரிட்டி போட்டாலே ப்ரெண்டு ஜம்ப் போனா பயம்….

என ஒவ்வொரு பயமாக பேசி… (ஸாரி) பாடியுள்ளார்.

இதனிடையில் இப்பாடலுக்கு இவர் டான்ஸ் வீடியோ மேக்கிங்கும் இதில் இடம் பெற்றுள்ளது.

மொத்தத்தில் இது கன்னி முயற்சி என்பதால் த்ரிஷாவை வாழ்த்தி வரவேற்போம்..!