ஓவியாவுக்கு த்ரிஷா கொடுத்த அட்வைஸ்!


ஓவியாவுக்கு த்ரிஷா கொடுத்த அட்வைஸ்!

த்ரிஷா தற்போது ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, ஜெயம் ரவி-அஞ்சலியுடன் ‘அப்பாடக்கரு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதால் வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்த்தனர். ஆனால் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் கமல்ஹாசனுடன் இணைந்து ‘ஓர் இரவு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வருண்மணியனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் த்ரிஷா திருமணம் நின்றுவிட்டதாக செய்திகள் வந்தன. இதற்கு த்ரிஷா தரப்பில் எந்தவித எதிர்ப்பும் எழவில்லை.

தற்போது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் ‘போகி’ படத்தில் ஓவியா, பூனம் பஜ்வா ஆகியோருடன் நடித்துவருகிறார். இப்படத்தின் இடைவேளையின் போது ஓவியாவுக்கு நடிப்பை பற்றி நிறைய டிப்ஸ் சொல்லிக் கொடுத்தாராம். கூடவே போதும் போதும் என்கிற அளவுக்கு அட்வைஸ்களை வழங்குகிறாராம் த்ரிஷா.