“கொடியில் தன்னை இணைத்துக் கொள்ளப்போகும் ‘கொடியிடை’!”


“கொடியில் தன்னை இணைத்துக் கொள்ளப்போகும் ‘கொடியிடை’!”

நடிக்க வந்து 13 வருடங்கள் கடந்து விட்டாலும் இன்னும் அதே கொடியிடையுடன் கொடி நாட்டி வருகிறார் த்ரிஷா.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் தவிர மற்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட இவர் தற்போதுதான் முதன்முறையாக தனுஷ் உடன் இணைந்துள்ளார்.

தனுஷ் தயாரித்து துரை செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு முன்பே ஆரம்பித்து விட்டது.

இன்றுமுதல் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் த்ரிஷா.

பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் த்ரிஷாவுடன் ஷாம்லி, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் ஆகியோரும் உண்டு. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.