‘விஜய் 60’ படத்தில் இணைந்த ‘அஞ்சான்’ கலைஞர்..!


‘விஜய் 60’ படத்தில் இணைந்த ‘அஞ்சான்’ கலைஞர்..!

விஜய் நடித்து, அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தின் பாடல்கள் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து பரதன் இயக்கவுள்ள ‘விஜய் 60′ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, நண்பராக சதீஷ் நடிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன்.

மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டிசைனராக டூயுனி ஜான் (Tuney John) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை அவரே தன் சமூகவலைத்தளத்தில் உறுதிபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விண்ணைத் தாண்டி வருவாயா, அஞ்சான், ஜில்லா, மெட்ராஸ், கோ, பிரேமம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு டிசைன்ஸ் செய்திருக்கிறாராம்.