‘ஐ’ நாயகி எமியுடன் இணைந்து விட்டதால் ‘கெத்து’ காட்டும் உதயநிதி!


‘ஐ’ நாயகி எமியுடன் இணைந்து விட்டதால் ‘கெத்து’ காட்டும் உதயநிதி!

உதயநிதியுடன் நயன்தாரா மற்றும் சந்தானம் நடித்து அடுத்த மாதம் வெளியாக தயாராகவுள்ளது ‘நண்பேன்டா’திரைப்படம். இதனைத் தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படத்தை சிவகார்த்திகேயன். ஹன்சிகா நடித்து வெளிவந்த ‘மான் கராத்தே’ என்ற படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கவிருக்கிறார்.

‘லாடம்’, ‘மைனா’, ‘கும்கி’ ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட படங்கள் ஒளிப்பதிவிற்காக பேசப்பட்ட படங்கள். இந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் உதயநிதியின் படத்திற்கு முதன்முறையாக ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். வழக்கம்போல் உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் உதயநிதியின் தந்தையாக நடிக்கவுள்ளாராம் சத்யராஜ். எமி ஜாக்சன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு தலைப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இறுதியாக ‘கெத்து’ என்று முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து ‘இதயம் முரளி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.

ஐ நாயகியுடன் இணைந்து விட்டதால் கெத்து டைட்டிலா? பேஸ் பேஸ் ரொம்ப நன்னாருக்கு…