‘இதயம் முரளி’க்காக இணைந்த உதயநிதி-ஹன்சிகா ஜோடி!


‘இதயம் முரளி’க்காக இணைந்த உதயநிதி-ஹன்சிகா ஜோடி!

‘குருவி’, ‘ஆதவன்’, ‘மன்மதன் அம்பு’ படங்களை தொடர்ந்து தயாரிப்பாளராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். அதன்பின்னர் இவர் தயாரிக்கும் படங்களில் இவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அரிதாரம் பூசி ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டடிக்க தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ படங்களில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார். இப்படங்கள் சரியாக போகாததால் மீண்டும் தன்னுடைய ‘கெத்து’ காட்ட எமி ஜாக்சனுடன் நடித்து வருகிறார். ‘கெத்து’ படத்தில் இவர்களுடன் சத்யராஜ், கருணாகரன் நடிக்கின்றனர். வில்லனாக விக்ராந்த நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ‘மான் கராத்தே’ திருக்குமரன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் நாயகியையும் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் உதயநிதி. ‘என்றென்றும் புன்னகை’ புகழ் அஹ்மத் இயக்கும் இப்படத்திற்கு ‘இதயம் முரளி’ என்று பெயரிடக்கூடும் எனத் தெரிகிறது. தேசிய விருது பெற்ற ‘ஜாலி LLB’ என்ற இந்திப்படத்தின் ரீமேக் இது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் உதயநிதியுடன் ஹன்சிகா மற்றும் பிரகாஷ்ராஜ், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மதி ஒளிப்பதிவு செய்கிறார்.