ரஜினிக்கு ஒரு நியாயம்… உதயநிதிக்கு ஒரு நியாயமா..? தொடரும் சர்ச்சை..!


ரஜினிக்கு ஒரு நியாயம்… உதயநிதிக்கு ஒரு நியாயமா..? தொடரும் சர்ச்சை..!

உதயநிதி தயாரித்து நடிக்கும் படங்களுக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு மறுக்கப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.

கடந்த வாரம் வெளியான மனிதன் திரைப்படத்திற்கும் இந்த வரிவிலக்கு மறுக்கப்படவே, தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து உதயநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில்… “மனிதன்’ படத்தை பார்த்த குழுவில் உள்ளவர்களுக்கு தமிழ் மொழி குறித்து போதிய ஞானம் இல்லை. அவர்கள் “மனிதன்’ என்ற சொல்லை தமிழே இல்லை என்று கூறிவிட்டனர்.

ஏவி.எம். தயாரித்து ரஜினிகாந்த் நடித்த மனிதன், உயர்ந்த மனிதன் உள்ளிட்ட படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்துள்ளது.

ஒரே பெயர் கொண்ட ஒரே விஷயத்தில் இரண்டு நிலைப்பாடுகளை எடுக்க முடியாது. எனவே, வரிச் சலுகையை மறுத்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்” என்று அந்த மனுவில் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வரவே, சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க கூறி, இவ்வழக்கை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.