சூர்யாவுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்..!


சூர்யாவுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்..!

மூன்று வேடங்களில் சூர்யா நடித்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் 24. சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற 11ஆம் தேதி நடத்திவிருக்கின்றனர். எனவே அதன்படி, காலையில் சென்னையிலும் மாலையில் ஐதராபாத்திலும் இந்த விழாவை நடத்த விருக்கிறார்களாம்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஒரே நாளில் சூர்யா கலந்து கொள்ளவிருக்கிறார்.

விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்தை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடவிருக்கின்றனர்.

அதே நாளில்தான் உதயநிதி, விவேக், ஹன்சிகா நடித்துள்ள ‘மனிதன்’ படமும் ரிலீஸாகவிருக்கிறது. அஹ்மத் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.