உண்மையை உடைக்கும் உதயநிதி..!


உண்மையை உடைக்கும் உதயநிதி..!

கெத்து படத்தை தொடர்ந்து அஹ்மத் இயக்கி வரும் ‘மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இவருடன் ஹன்சிகா, விவேக், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை, சாலக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் உதயநிதி வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவதால், இதில் சமூக அக்கறை கொண்ட காட்சிகள் இடம் பெறுகிறதாம். எனவே உதயநிதி கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க தன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார் உதயதிதி.