அஜித்தின் ‘மங்காத்தா’வில் இணைந்த உதயநிதி…. எப்படி..?


அஜித்தின் ‘மங்காத்தா’வில் இணைந்த உதயநிதி…. எப்படி..?

வெற்றிப் படங்களின் தயாரிப்பாளராக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது வெற்றிகளின் நாயகனாகவும் வலம் வருகிறார்.

இதுநாள் வரை ஒரு ஜாலியான பையன், ஊர் சுற்றித் திரிபவர் என நடித்துக் கொண்டிருந்த இவர், இறுதியாக வெளியான மனிதன் படத்தில் ஒரு நேர்மையான வழக்கறிஞராக நடித்திருந்தார்.

இப்படத்திற்கும் உதயநிதியின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மங்காத்தாடா என்ற அஜித் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஆனால் அதை மாற்றி வடிவமைத்துள்ளார். அதாவது அதன் க்ளைமாக்ஸ் காட்சியில் அஜித் மற்றும் அர்ஜீன் இருவரும் கோடிக்கணக்கான பணத்தை அடித்து விட்டு செல்வது போல காட்சி இருக்கும்.

ஆனால் இதில் வைகோ மற்றும் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் முகம் உள்ளது.

இதன் முலம் உதயநிதி என்ன சொல்ல வருகிறாரோ…? புரிஞ்சிட்டா…?

 

Viko and Lakani