‘மனிதன்’ தமிழ் சொல் அல்ல… உதயநிதிக்கு வரிவிலக்கு மறுப்பு..!


‘மனிதன்’ தமிழ் சொல் அல்ல… உதயநிதிக்கு வரிவிலக்கு மறுப்பு..!

அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி, ஹன்சிகா, விவேக், பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த மனிதன் படம் நேற்று ரிலீஸ் ஆனது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தை உதயநிதியே தயாரித்திருந்தார்.

ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக கூறப்பட்டுள்ள அறிக்கையில், மனிதன் என்ற சொல் தமிழ் வார்த்தையல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சொல் சமஸ்கிருதச் சொல் எனவும் மாந்தன், மாந்தர் என்பதே தமிழ் சொல் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த அறிக்கையை படிக்கவும்…

 

 

Manithan Hole

 

 

Manithan 2