எம்ஜிஆருடன் மோதும் சசிகுமார், உதயநிதி..!


எம்ஜிஆருடன் மோதும் சசிகுமார், உதயநிதி..!

அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி, ஹன்சிகா, விவேக் நடித்துள்ள படம் மனிதன். இப்படம் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகிறது.

இதே நாளில் வசந்தமணி இயக்கத்தில் சசிக்குமார், மியா ஜார்ஜ் ஜோடியாக நடித்துள்ள வெற்றிவேல் படமும் திரைக்கு வருகிறது. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ (MGR) படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது இப்படம் இதே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

முக்கிய கேரக்டரில் சந்தானம், மணிவண்ணன், ராஜேந்திரன், மனோபாலா நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைக்க ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.