சிவகார்த்திகேயன் படைத்த சாதனை.. கொண்டாடும் ரசிகர்கள்..!


சிவகார்த்திகேயன் படைத்த சாதனை.. கொண்டாடும் ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயன் படத்திற்கு அனிருத் இசையில் வரும் பாடல்களுக்கு எப்படி ஒரு வரவேற்பு உள்ளதோ, அதற்கு இணையாக இமானின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கிய ரஜினிமுருகன் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இவருடன் கீர்த்தி, சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இமான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற உம் மேல ஒரு கண்ணு என்ற பாடல் யூடியுப்பில் பெரும் சாதனை படைத்துள்ளது.

இப்பாடலின் வீடியோ காட்சியை இதுவரை 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதனை சோனி மியூசிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.