‘கவலை வேண்டாம்’ கதை லீக்… கவலையில் படக்குழு…!


‘கவலை வேண்டாம்’ கதை லீக்… கவலையில் படக்குழு…!

ஜீவா நடித்துள்ள ‘போக்கிரி ராஜா’ படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா ஆகியோருடன் ஜீவா நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

‘யாமிருக்க பயமே’ படப்புகழ் டிகே இயக்கிவரும் இதன் படப்பிடிப்பு தற்போது குன்னூரில் நடைபெற்று வருகிறது.

எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இவர்களுடன் ஸ்ருதி ராமகிருஷ்ணன், கருணாகரன், ஆர் ஜே பாலாஜி, பால சரவணன், மந்த்ரா, மயில்சாமி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் இதில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் கதை வெளியாகியுள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் வெகு வேகமாக நடந்தேறி வரும் ‘லவ் பிரேக் அப்’தான் படத்தின் மையக்கருவாம்.

இதில் ஜீவாவை ஒருதலையாக காதலிக்கிறார் சுனைனா. ஆனால் ஜீவாவுக்கு காஜல் அகர்வால் மீதுதான் செம லவ்வாம். இதனால் அமைதியான பெண்ணான சுனைனா எப்படி ஜீவாவை கவர முயற்சிக்கிறார் என்பதுதான் படத்தின் முழுக்கதை என தெரிய வந்துள்ளது.

கதை லீக் ஆனதால், கவலையில் உள்ளதாம் படக்குழு.

அட.. என்ன பாஸ்… கவலை வேண்டாம் டைட்டிலை வச்சிட்டு இப்படி ஃபீல் பண்ணலாமா???