பொங்கல் ரேஸில் மோதும் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால்!


பொங்கல் ரேஸில் மோதும் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் புத்தாண்டு முதல் தினத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை. ஆனால் இந்தாண்டு எட்டு படங்கள் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் பண்டிகையாக பொங்கல் வருகிறது.

அன்றைய தினம் தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களின் ஐந்து படங்கள் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் நிறைய தியேட்டர்கள் இருந்தாலும் கிட்டதட்ட 750 தியேட்டர்களே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன. எனவே ஐந்து படங்கள் வெளியாகவிருப்பதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழும் எனத் தெரிகிறது.

இதுவரை பொங்கல் வெளியீட்டுக்கு கீழ்வரும் படங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இதில் மேலும் படங்கள் சேர்ந்தாலும் அல்லது இந்த ரேஸில் இருந்து ஒருசில படங்கள் விலகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாலாவின் ‘தாரை தப்பட்டை’, விஷாலின் ‘கதகளி’, ஜெயம் ரவியின் ‘மிருதன்’, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் மற்றும் உதயநிதியின் ‘கெத்து’ ஆகிய ஐந்து படங்கள் பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.