கமல் பட நாயகி 42 வயதில் ரகசிய திருமணம்..!


கமல் பட நாயகி 42 வயதில் ரகசிய திருமணம்..!

ஷங்கர் இயக்கி, கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து அசத்திய படம் இந்தியன். இதில் கமலுடன் சுகன்யா, மனீஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர்.

இதில் ஊர்மிளா சில காட்சிகளில் தோன்றி, ரசிகர்களை சூடேற்றியிருந்தார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1980ஆம் ஆண்டில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு தற்போது 42 வயதாகிறது. இந்நிலையில் இவர் காஷ்மீரை சேர்த்த மோஷின் அக்தர் மிர் (Mohsin Akhtar Mir) என்ற தொழிலதிபரை நேற்று ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்.

இதில் திரையுலகினர் எவரும் கலந்துக் கொள்ளவில்லை. மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.