அப்பா கமல் – மகள் ஸ்ருதி இடையே மோதல்… ஏன் ?


அப்பா கமல் – மகள் ஸ்ருதி இடையே மோதல்… ஏன் ?

கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தமவில்லன்’. இவருடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், ஊர்வசி, ஜெயராம், எம். எஸ். பாஸ்கர் மற்றும் இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை  ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

வில்லுப்பாட்டு மற்றும் சரித்திர கால கதையைப் பின்னணியாகக் கொண்ட  இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டங்கள் எழுந்துள்ளபோதும் இப்படம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமலின் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இன்னுமொரு இன்ப அதிர்ச்சியாக கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த ‘கப்பர் இஸ் பேக்’ என்ற ஹிந்தி படமும் அன்றைய தினமே வெளியாகவுள்ளது. ஏ.ஆர். முருகதாஸின் கதையில் உருவாகியுள்ள ‘கப்பர் இஸ் பேக்’ படத்தில் அக்ஷய்குமார், ஸ்ருதிஹாசன் மற்றும் கரீனா கபூர் நடித்துள்ளனர். விஜயகாந்த் நடித்து தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ரமணா’ படத்தின் ரீமேக்தான் இப்படம் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே மே 1 ஆம் தேதி தந்தை-மகளின் இருவரின் படங்களும் ஒன்றாக வருவதால் உலகநாயகனின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.