வாலியின் மரண பாடல்- ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’


வாலியின் மரண பாடல்- ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’

பின்னணி பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான க்ரிஷ் நாயகனாக நடிக்க, ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்க வளர்ந்து வரும் படம் ’புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’.

இவர்களுடன் ‘வெண்ணிலா கபடி குழு’ நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய் பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பல வெற்றிப் படங்களை தயாரித்த இப்ராஹீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.

செந்தில்மாறன் ஒளிப்பதிவு  செய்ய இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர். ரகுமானின் சகோதரி ரைஹானா. பாடல்களை – கவிஞர் வாலி (முன்பு எழுதிய பாடல்) கங்கை அமரன் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். பிரபல இயக்குனர்கள் ஆர். மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த தம்பி செய்யது இப்ராஹிம் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது… “எல்லோருக்கும் முதல் காதல் ஒன்று கண்டிப்பாக இருக்கும். அதில் சில விஷயங்களை சொல்ல தயங்கியிருப்பார்கள். அப்படி அவர்கள் சொல்ல தயங்கிய விஷயம்தான் இப்படத்தின் கதை.

கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. அப்பாடல் மரணம் சம்மந்தப்பட்டது. தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. முடிவடைந்ததும் படம் விரைவில் திரைக்கு வரும்” என்றார்.