சந்திரமுகி பார்ட் 2… ரஜினி இல்லை. ஆனால் வடிவேலு இருக்கிறார்..!


சந்திரமுகி பார்ட் 2… ரஜினி இல்லை. ஆனால் வடிவேலு இருக்கிறார்..!

சிவாஜி புரொக்டக்ஷன் சார்பில் பிரபு தயாரிக்க பி வாசு இயக்கத்தில் உருவான படம் சந்திரமுகி.

இதில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, நாசர், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடி மாபெரும் ஹிட்டடித்த படம் என்ற பெருமை இப்படத்திற்கு உண்டு.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறாராம் இயக்குனர் பிவாசு.

இதில் ஹீரோவாக லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நாயகி வேட்டை நடந்து வருகின்றது.

இதில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.