கமல்ஹாசன், வைரமுத்து திடீர் சந்திப்பு!


கமல்ஹாசன், வைரமுத்து திடீர் சந்திப்பு!

“இது ஒரு பொன்மாலை பொழுது…” என்ற பாடல் வரிகளை தனது விசிட்டிங் கார்டாக வைத்துக் கொண்டு சினிமாவில் நுழைந்தவர் வைரமுத்து. அன்று தொடங்கிய இவரது இசைப்பயணம் 35 வருடங்களை கடந்தும் இன்றும் அதே இளமை வரிகளோடு பயணித்து கொண்டிருக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது நிறைய கவிதை தொகுப்புகளையும் சிறுகதைகளையும் வெளியிட்டு வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து.

இந்நிலையில் இவர் எழுதிய நாவல் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதாக சமீபத்தில் சாகித்ய அகாடமி அறிவித்தது. வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலி செய்யப்பட்ட 14 கிராமங்களின் உணர்வுபூர்வமான கதைதான் இந்த கள்ளிக்காட்டு இதிகாசம். இந்த மொழிபெயர்ப்பு முழுவதுமாக முடிந்ததும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுகவிழா நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார் வைரமுத்து.

இந்நிலையில் இவர் தற்போது எழுதியுள்ள ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற நூலினை வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார். இதற்கான அழைப்பிதழை கமல் இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து அளித்தார். இவரைத் தொடர்ந்து கமலின் சகோதரர் நடிகர் சந்திரஹாசனுக்கும் வைரமுத்து அழைப்பிதழ் வழங்கினார்.