அர்ஜுனுடன் இணைந்த சரத்குமார் மகள் வரலட்சுமி!


அர்ஜுனுடன் இணைந்த சரத்குமார் மகள் வரலட்சுமி!

ஸ்னேகா, பிரசன்னா இணைந்து நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ மற்றும் ‘கல்யாண சமையல் சாதம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இந்த இருபடங்களையும் தயாரித்த இவர் சீர்காழியைச் சேர்ந்தவர். இதன்பின்னர் மலையாளத்தில் மோகன்லால் நடித்து பெரும் ஹிட்டடித்த ‘பெருச்சாழி’ என்ற படத்தையும் இயக்கினார். தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார்.

அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இது ஆக்ஷன் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது. இது வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல், எந்த ஒரு விசாரணையும் தனது புத்திசாலித்தனத்தால் எதிர்கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாம்.

தற்போது இப்படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் இணைந்துள்ளார். இத்தகவலை வரலட்சுமி தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் தலைப்பு மற்றும் மற்ற கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.