‘காஞ்சனா’ சரத்குமார் கெட்டப்பில் மம்மூட்டியுடன் வரலட்சுமி..!


‘காஞ்சனா’ சரத்குமார் கெட்டப்பில் மம்மூட்டியுடன் வரலட்சுமி..!

பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் அபாரமான நடிப்பை கொடுத்திருந்தார் வரலட்சுமி.

இதன்பின்னர் தமிழில் வாய்ப்புகள் இவருக்கு குவியும் என எதிர்பார்த்தனர்,

ஆனால் இவரது நடிப்பை பார்த்த மலையாள திரையுலகம் இவரை அழைத்துக் கொண்டது.

தற்போது ரஞ்சி பணிக்கர் இயக்கும் ‘கசாபா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்மூட்டி.

விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடைபெற்றும் வரும் நிலையில் இதில் தான் ஏற்கும் வேடத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.

இதில் காஞ்சனா படத்தில் இவரின் தந்தை சரத்குமார், அணிந்து வந்த சிவப்பு புடவை, கறுப்பு ஜாக்கெட் அணிந்து, மிரட்டலாக வருவது போன்று அப்படம் அமைந்துள்ளது.