‘மருது’ ஹிட்டு… ஆனா விஷால் இப்படி செய்யலாமா?’ வரலட்சுமி கேள்வி..!


‘மருது’ ஹிட்டு… ஆனா விஷால் இப்படி செய்யலாமா?’ வரலட்சுமி கேள்வி..!

சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியும் விஷாலும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே.

இவர்கள் இருவரும் மதகஜராஜா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ஆனால் இப்படம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று விஷாலின் மருது படம் வெளியானது.

பக்கா ஆக்ஷன் மசாலா படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

எனவே, இப்படம் குறித்து வரலட்சுமி கூறியது..

மருது சூப்பர் ஹிட்டு. ஆனால் ஒரு மாஸ் ஹீரோ விஷால் இப்படி செய்யலாமா? என விஷாலின் போட்டோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் விஷால் குழந்தைகள் ஸ்கூல் புத்தகத்தில் உள்ள கார்டூன் படங்களுக்கு கலரிங் செய்துக் கொண்டிருக்கிறார். அதனை கிண்டல் செய்வதற்காக வரலட்சுமி இப்படி கூறியிருக்கிறார்.

marudhu vishal drawing