மாயமான வேந்தர் மூவிஸ் மதன்… வாரணாசியில் தேடும் சிவா..!
Published: May 31, 2016
எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவரும், ஐஜேகே கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரி வேந்தருக்கு ‘காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதி மாயமானவர் வேந்தர் மூவிஸ் மதன்.
அந்த கடிதம் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அதன்பின்னர் மதன் பற்றிய எந்த தகவலும் இல்லை.
மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் எங்கோ சென்றுவிட்டார்.
இதனால் அவருக்கு நெருக்கமானவர்கள் வாரணாசி சென்று அங்கு தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அங்கு சென்றுள்ள சினிமா தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளதாவது…
“மதன் தங்கியிருந்த ஹோட்டலைக் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அவர் எங்கியிருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரது பொருட்கள் அறையில் உள்ளது.
அவர் இங்கு அடிக்கடி வருவதால், இங்குள்ள நண்பர்கள் மற்றும் போலீசாரின் உதவியோடு படகுகள் மூலம் கங்கை நதியில் தேடிவருகிறோம்.” என்றார்.
-
Artists:
சிவா, பாரிவேந்தர், மதன்