வருண்மணியுடன் பிரச்சினை; த்ரிஷாவின் திருமணம் ரத்து!


வருண்மணியுடன் பிரச்சினை; த்ரிஷாவின் திருமணம் ரத்து!

தென்னிந்திய சினிமாவில் 12 வருடங்களுக்கு மேலாக நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. திரைப்படத் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண்மணியனுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் கடந்த ஜனவரி 23ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களை தயாரித்தவர் வருண்மணியன். இவர் அடுத்து ஜெய் நாயகனாக நடிக்க திரு இயக்கத்தில் புதிய படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இப்படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட த்ரிஷா பின்னர் விலகினார். இவருக்கு பதிலாக நடிகை டாப்ஸி தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்பிரச்சினையிலே இவர்களுக்கு சிறியளவில் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் த்ரிஷா நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதை வருண்மணியன் குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு முற்றிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் நிச்சயத்தின் போது வருண்மணியன் அணிவித்த மோதிரத்தை த்ரிஷா தற்போது அணியவில்லை. கழட்டி எறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற வருண்மணியனின் தங்கை திருமணத்திலும் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. இவ்வாறாக ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் இவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஆனாலும் இவர்களின் நண்பர்கள் இவர்களுக்கிடையில் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.