‘ரித்திகா சிங்குக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக்கில்லை…’ – வசுந்தரா


‘ரித்திகா சிங்குக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக்கில்லை…’ – வசுந்தரா

‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமாகி, ‘பேராண்மை’ ,”தென்மேற்கு பருவக்காற்று’ , ‘போராளி’ ஆகிய தரமான படங்களில் நடித்தவர் வசுந்தரா காஷ்யப்.

பண திருப்திக்காக கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தாமல் தன் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு…

நான் படங்களின் எண்ணிக்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. வழக்கமான கமர்ஷியல் படங்களில் நடிக்க மாட்டேன்.

இப்போது ‘மைக்கேல் ஆகிய நான்’ ,’புத்தன் இயேசு காந்தி’ என்று இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இரண்டுமே தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் ‘மைக்கேல் ஆகிய நான்’ ஒரு ஹாரர் படம். ‘புத்தன் இயேசு காந்தி’சற்றே மாறுபட்ட படம்.

இதுதவிர ஒரு பீரியட் ஃபிலிம் படத்தில் நடிக்கிறேன். சிலநூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை.

 

Vasundhara Kashyap 1

 

அதிசயா என்பது இயக்குனர் சரண் வைத்த பெயர். ஒரு செண்டிமெண்டுக்காக அவர் வைத்தாலும் என் இயற்பெயரிலே இருக்க எனக்கு விருப்பம். வசுந்தரா என் சொந்தப் பெயர்.

சினிமாவே பார்க்காத குடும்பம் எங்கள் குடும்பம். எப்போதாவது விசேஷ நாட்களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் படங்கள் பார்க்க மட்டுமே அனுமதி. சினிமா பற்றி எந்த அபிப்ராயமும் இல்லாமல் இருந்தது.

 

Vasundhara Kashyap 2

 

சினிமாவுக்கு வரும்போது சூட்டிங்கில் திமிராக நடந்து கொள்வார்கள். ஆடம்பரமாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், குடும்ப நண்பர்கள் போல பழகினார்கள். எல்லா உதவி இயக்குநர்களும் எனக்கு நண்பர்கள்தான்.

சினிமாவில் வெற்றி பெற திறமை, உழைப்பு வேண்டும். கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அண்மையில் ‘இறுதிச்சுற்று’ பார்த்தேன். அதுவும் பிடித்திருந்தது.

 

Vasundhara Kashyap 3

ரித்திகாசிங்கிற்கு முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்ததும் சந்தோஷப்பட்டேன். அவர் திறமைசாலி மட்டுமல்ல அதிர்ஷ்டசாலியும் கூட. எனக்கு ’தென்மேற்கு பருவக் காற்று’ படத்தில் தேசிய விருது கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் அந்த அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை.

எனக்கு மீடியாவில் ஆர்வம். ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்பட்டேன். நான் ஆங்கில இலக்கியம் படித்ததே அதற்காகத்தான். இப்போது நான் நடித்துள்ள ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் கூட பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன்.

 

Vasundhara Kashyap 4

 

என்னைப் பத்திரிகையாளர்கள் பலரும் பாதித்து இருக்கிறார்கள் அவர்களின் பாதிப்பு அந்தக் கேரக்டரில் இருக்கும்.. ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தில் இயக்குநரும் ஒரு பத்திரிகையாளர்தான் என்பதால் அவர் சொன்னபடிதான் நடித்தேன்”

என்றார் வசுந்தரா காஷ்யப்.