அசுர வேகத்தில் அஜித்தின் ‘வேதாளம்’!


அசுர வேகத்தில் அஜித்தின் ‘வேதாளம்’!

ஒரு பக்கம் ‘புலி’ தரிசனத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மறுபக்கம் ‘வேதாளம்’ படத்தின் ஒவ்வொரு தகவலுக்காகவும் அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ‘புலி’ வரும் நாளில் அஜித்தின் ‘வேதாளம்’ டீசர் வெளியாகவுள்ளது.
தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டி இருப்பதால் அஜித்தின் ‘வேதாளம் அசுர வேகம் எடுத்துள்ளது. ஒருபுறம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. மறுபுறம் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளின் எடிட்டிங் மற்றும் க்ராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடவுள்ளாராம். அஜித் மீது தான் கொண்ட காதலை ஸ்ருதி வெளிப்படுத்தும் விதமாக பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அப்பாடலை சம்பந்தப்பட்ட ஸ்ருதியே பாடினால் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.
அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இவர் இப்போதுதான் முதன்முறையாக அஜித் படத்திற்கு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.