விஜய் சேதுபதியை மிரட்டும் அஜித் பட வில்லன்.!


விஜய் சேதுபதியை மிரட்டும் அஜித் பட வில்லன்.!

ரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படம் ‘றெக்க’. இப்படத்தின் பூஜை சிலநாட்கள் முன்பு நடைபெற்றது.

இதில் வக்கீலாக விஜய்சேதுபதி நடிக்க, இவரது தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

பெங்களூரில் தன் படிப்பை முடித்த விஜய்சேதுபதி, தன் சொந்த கிராமத்திற்கு வருகிறார். அப்போது அங்குள்ள இரண்டு கேங்ஸ்டர்களுடன் மோதும் சூழ்நிலை உருவாகிறதாம்.

இந்த இரண்டு கேங்ஸ்டர்களாக அஜித்தின் ‘வேதாளம்’ கபீர்சிங் மற்றும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இமான் இசையமைக்கவுள்ள இதன் படப்பிடிப்பு மே மாதம் 12ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.