அனிருத் இசையில் தனுஷின் தம்பி நடிக்கும் ‘ரம்’!


அனிருத் இசையில் தனுஷின் தம்பி நடிக்கும் ‘ரம்’!

வேல்ராஜ் இயக்கிய ‘தங்கமகன்’ மற்றும் பிரபுசாலமன் இயக்கிய படம் ஆகியவற்றை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் தனுஷ். இவரைத் தொடர்ந்து இவரது தம்பியும் புதுப்படத்தில் நடிக்க தயாராகி விட்டார். தனுஷிற்கு அண்ணன் இருப்பது தெரியும். அது யார் தனுஷின் தம்பி என்றுதானே கேட்கிறீர்கள்?

அவர் வேறுயாருமல்ல ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ்தான். இவர் ‘ரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். தற்போது மற்ற கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, இப்படத்தின் இயக்குனர், ஹீரோயின், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மட்டும் தற்போதே ஒப்பந்தமாகிவிட்டாராம்.

அனிருத் இசையில் அஜித் நடித்த ‘வேதாளம்’ படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. மேலும் ‘தங்க மகன்’ படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.