விஐபி இயக்குனரை வளைத்துக் கொண்ட விஷால்!


விஐபி இயக்குனரை வளைத்துக் கொண்ட விஷால்!

இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் வேல்ராஜ். தமிழில் தன் முதல் படமான ‘பொல்லாதவன்’ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் டிவி விருதை வென்றார். தொடர்ந்து ‘ஆடுகளம்’, ‘3’, ‘எதிர்நீச்சல்’, ‘சிறுத்தை’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கும், மலையாளம, கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார்.

இந்நிலையில் முதன்முறையாக தனுஷ் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இயக்கினார். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. நிறைய விருதுகளையும் இப்படம் பெற்றுத் தந்தது. தற்போது தனுஷ், சமந்தா, எமி நடிக்கும் ‘விஐபி-2’ படத்தை இயக்கி வருகிறார். இதனிடையில் சுசீந்திரன் இயக்கும் விஷாலின் ‘பாயும் புலி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வந்தார். இதனால் தனுஷ் படத்தை இயக்குவதற்கு சரியாக வரவில்லை என்ற பேச்சுக்கள் வந்தது வேறு கதை.

தற்போது விஷாலின் புதிய படத்திற்கும் வேல்ராஜே ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளாராம். ‘மருது’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களை இயக்கிய முத்தையா இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் சார்பாக மதுரை அன்பு தயாரிக்கிறார்.