நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம்..!


நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

இப்பட்டத்தை பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” அவரது கலைச்சேவையை பாராட்டி வழங்குகிறது.

இதற்கான விழா, வருகிற மே 7ஆம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

இவ்விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி k.கணேஷ் தலைமையேற்கிறார். சுப்ரீம் கோர்ட், முன்னாள் நீதிபதி டாக்டர் P.S.சவ்ஹான் டாக்டர் பட்டத்தை நாசருக்கு வழங்கவிருக்கிறார்.

தனது ஆறு வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் “கல்யாண அகதிகள்” என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார்.

இதுவரை தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Related