நடிகர் விமலுக்கு இப்படியொரு விளம்பரமா..?


நடிகர் விமலுக்கு இப்படியொரு விளம்பரமா..?

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பாக மதன் தயாரித்துள்ள படம் ‘மாப்ள சிங்கம்’. ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விமலுடன் அஞ்சலி, சூரி, காளி வெங்கட், ராமதாஸ், மனோபாலா, மதுமிலா, சுவாமிநாதன், மயில்சாமி, சிங்கமுத்து, ராதாரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் அரசியல், காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.

வருகிற மார்ச் 11ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் விளம்பரங்களை அரசியல் கட்சி விளம்பரங்களை போல் செய்து வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடுகிறாரா விமல்??? என்ற வாசகங்கள் உள்ள போஸ்டர்கள் சென்னை நகரம் முழுவதும் கலக்கி வருகிறது.

இதனை பார்க்கும் சிலர் நிஜமாலுமே விமல் தேர்தலில் போட்டியிடுகிறாரா? என்று பேசியபடி செல்கின்றனர்.

‘அஞ்சல’தான் கைகொடுக்கல.. அட்லீஸ்ட் இந்த விளம்பரம் கைகொடுக்குமா? என்பதை பார்க்கலாம்.